திங்கள், 28 டிசம்பர், 2015

நீர்ச்சொட்டு

நீர்ச்சொட்டு
இலையின் முனையில்  குவிந்திருக்கும் நீர்த்துளி இன்னும் சற்றுநேரத்தில் சிதறப்போகிறது பொடிப்பொடித்துளியாய்..
அதற்குள் அது ஞாபகப்படுத்துகிறது
ஒரு தலைகீழான ஆச்சர்யத்தை..
காதலியின் கடைசிக் கண்ணீர்த்துளியை..
பால் சுரந்துநிற்கும் மாட்டின் காம்பை.
என்றோ அவளிட்டு வந்த நெற்றிப்பொட்டை..
அடிக்காமல் பாடம் சொல்லிக்கொடுத்த உமா டீச்சரின் காதணியை.
ஆழமான ஒரு கடலை..
அழகான ஒரு மழையை..
குதித்து உயிர்விடுமொரு தற்கொலையை..
துரோகத்தைக் குத்திக் கொன்ற கத்தியிலிருந்து வழிந்த  கடைசி இரத்தத் துளியை..
-சௌவி